விலை உயர்வால் சரிந்த வெங்காய நுகர்வு - வாரத்துக்கு ரூ.350-400 வெங்காயத்துக்கு செலவு

தொடரும் விலை உயர்வால் வெங்காய விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வால் சரிந்த வெங்காய நுகர்வு - வாரத்துக்கு ரூ.350-400 வெங்காயத்துக்கு செலவு
x
தொடரும் விலை உயர்வால் வெங்காய விற்பனை சரிந்துள்ளதாக  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெங்காயம் கிலோ ஒன்றுக்கு தர வாரியாக 200 ரூபாயில் இருந்து 240 ரூபாய் வரை அதிகரித்து விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனிடையே மதுரையில் பொதுமக்களின் வெங்காய நுகர்வு பெருமளவு சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வாரத்துக்கு 350 முதல் 400 ரூபாய் வெங்காயத்துக்கு மட்டும் செலவழிப்பதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்