குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் பெண்கள் - பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் பெண்கள் - பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக பெண்கள் பிச்சை எடுக்க கைக்குழந்தைகளை பயன்படுத்துவதாகவும் சில சமயங்களில் சிறுமிகளை வைத்து பக்தர்களின் பொருட்களை திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பிச்சைக்காரர்களின் நடமாட்டத்தை குறைக்க வேண்டுகோள் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்