ஜெயலலிதா நினைவு தினம் : அ.தி.மு.க-வினர் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவு தினம் : அ.தி.மு.க-வினர் அஞ்சலி
x
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொண்டர்கள், அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நினைவஞ்சலி ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது. சாத்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்குராந்தலில் நிறைவுபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் சென்ற அ.தி.மு.கவினர், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்