ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி, வாலாஜா சாலை வழியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவுபெற்றது. பேரணியில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். பேரணியின் நிறைவில் மெரினாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா  நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


ஜெயலலிதா நினைவு தின உறுதி மொழி ஏற்பு :


பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயலலிதா வழியை பின்பற்றி அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும் விசுவாசியாகவும் இருக்க போவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி ​மொ​ழியை வாசிக்க, முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்