"மழை பாதிப்பு- நிவாரண உதவி தேவை" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மீறி சென்னை புறநகர் மாவட்டங்கள், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பாதிப்பின் தீவிரமும், அளவும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக நிலைமை சமாளிக்கத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story