6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடலூரில் பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென் மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், இதன் காரணமாக ஏற்கனவே பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனை தொடர்பு கொண்ட போது திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை திருவள்ளூர், வேலூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.Next Story

மேலும் செய்திகள்