பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டுறவு தேர்தல் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட சங்க துணைப்பதிவாளர்  வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து,  வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து உள்ளிட்டோர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கூட்டுறவு விதிகளை பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக  நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவரது நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்