36வது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்த ராணிப்பேட்டை என்ற புதிய மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
x
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராணிப்பேட்டை சென்றனர். அங்கு நடைபெற்ற மாவட்ட தொடக்க விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிலோபர் கபில் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையை முதலமைச்சர் பழனிசாமி இசை வாத்தியங்கள் முழங்க திறந்து வைத்தார்.  Next Story

மேலும் செய்திகள்