நகை அனுப்புவதாக கூறி நூதன மோசடி : பார்சலில் பாசிமணி வந்ததால் அதிர்ச்சி

குலுக்கலில் பரிசாக விழுந்த தங்க நகையை, பார்சலில் அனுப்பி வைப்பதாகக் கூறி, நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.
நகை அனுப்புவதாக கூறி நூதன மோசடி : பார்சலில் பாசிமணி வந்ததால் அதிர்ச்சி
x
குலுக்கலில் பரிசாக விழுந்த தங்க நகையை, பார்சலில் அனுப்பி வைப்பதாகக் கூறி, நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.  திருச்சி அருகே, துவாக்குடி அடுத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த நவீனுக்கு, செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தங்கச் செயின் மற்றும் விலை உயர்ந்த காதணி பரிசாக விழுந்துள்ளதாக கூறி உள்ளார். இதனை பார்சலில் பெற்றுக் கொள்ள 3 ஆயிரத்து 500 ரூபாய் நவீன் கொடுத்தார். ஆனால், பார்சலில், பாசிமணி தான் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்