"ரூ.1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக, தென்காசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் பெறப்பட்ட 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்களில், 5 லட்சத்து 11 ஆயிரத்து 183 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் பெறப்பட்ட 4 ஆயிரத்து 433 மனுக்களில் 2 ஆயிரத்து 835 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல்,  ஒரு லட்சம் ரூபாய் வரை சொத்து உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவும் அவர் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்