மாணவிகளுக்கு, ஆபாச வீடியோ காண்பித்ததாக பெற்றோர் புகார் : பள்ளி தாளாளரிடம் விசாரணை

கோவையில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காண்பித்த புகாரில், பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு, ஆபாச வீடியோ காண்பித்ததாக பெற்றோர் புகார் : பள்ளி தாளாளரிடம் விசாரணை
x
காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டுமாணவிகளுக்கு, பள்ளி தாளாளர் மரிய அண்டனி, யூ டியூபில் ஆபாச படம் காண்பித்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து, மாணவிகள் தெரிவித்த தகவலின் பேரில், இன்று காலை தாளாளர் மரிய ஆண்டனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்,  அவர் மீது போலீசில் புகார் அளித்தனர்.  இதனை தொடர்ந்து, தாளாளர் மரிய ஆண்டனியிடம், காவல் உதவி ஆணையர் கார்த்திகேயன் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதில் அவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காண்பித்தது உறுதியானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்