"கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர்" : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் மண் மற்றும் கனிமவளங்களை அரசியல் கட்சியினர் சட்ட விரோதமாக கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
x
காங்கேயம் அருகே,  படியூர், தம்புரெட்டி பாளையம், கணபதி பாளையம், சிவன்மலை உள்ளிட்ட ஊர்களில்  விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி,  அங்கிருந்து, அனுமதியில்லாமல் 20 அடி ஆழம் வரை மண் மற்றும் பாறைகளை வெட்டி  எடுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக  பலமுறை புகார் அளித்தும் , முறைகேட்டில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்