"அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வாருங்கள்" - அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு
அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருமாறு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருமாறு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும்,பல பள்ளிகளில் குடிநீர், கழிப்பிடம், சுற்றுச்சுவர் என பல தேவைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த, contribute.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மக்கள் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்திட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
Next Story