"தமிழ்ப் பல்கலை. பணி நியமன மோசடி" - உரிய விசாரணை நடத்த உத்தரவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலை. பணி நியமன மோசடி - உரிய விசாரணை நடத்த  உத்தரவு
x
2017 ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் 21 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். நியமனத்தில், முறைகேடு உள்ளதாக கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், உரிய விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், பட்டம் மற்றும் பணியாற்று முறையில், நியமனம் பெற்ற 21 பேரும் யு.ஜி.சி. தரப்படி தகுதியற்றவர்கள் என தெரியவந்தது. நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கியது, தலா 15 லட்ச ரூபாய் முதல் 40 லட்சம் வரை லஞ்சம் முயற்சி பெற முயற்சித்தது தெரியவந்தது. இதில், முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துகுமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன், தொலை நிலைக் கல்வி இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் மீது குற்றச் சதி, நம்பிக்கை மோசடி, லஞ்சம் பெறுதல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்