"புதிதாக 2 வழக்குகளையும் என் மீது போட முயற்சி" : நீதிமன்றத்திற்கு வந்த போது குற்றச்சாட்டு முன்வைத்த சுரேஷ்

புதிதாக 2 கொள்ளை வழக்குகளை போலீசார் தன் மீது போட முயற்சி செய்வதாக கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
புதிதாக 2 வழக்குகளையும் என் மீது போட முயற்சி : நீதிமன்றத்திற்கு வந்த போது குற்றச்சாட்டு முன்வைத்த சுரேஷ்
x
திருச்சி சமயபுரம் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கு மற்றும் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த இரு வழக்குகளும் தற்போது முடிவுக்கு வர உள்ளது. ஆனால் திருச்சி மாநகரத்தில் நடந்த மற்ற 2 வழக்குகளை போலீசார் கையில் எடுத்துள்ளனர். கொள்ளை வழக்கில் கைதான சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது போலீசார் தன் மீது மற்ற 2 வழக்குகளை போட முயற்சி செய்வதாகவும், தனக்கும் அந்த வழக்குகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த கொள்ளை வழக்குகளை தன் மீதும் தன் உறவினர்கள் மீதும் சுமத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்