தென்காசி மாவட்டத்துடன் 10 கிராமங்கள் இணைப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு - போராட்டம் நடத்த முடிவு

தென்காசி மாவட்டத்துடன் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்துடன் 10 கிராமங்கள் இணைப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு - போராட்டம் நடத்த முடிவு
x
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள பாப்பாக்குடி உள்ளிட்ட 10 கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதற்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து தேவைகளுக்கும் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள புதிய தாலுகாவிற்கு செல்ல வேண்டும் என்றும் , இதனால் வீண் அலைச்சல் மற்றும் கால விரயம்  ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து  கேட்பு கூட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் 10 கிராமங்களை பழையபடி நெல்லை மாவட்டத்துடன் இணைக்காவிட்டால் ரேஷன் , ஆதார் அட்டைகளை அரசிடம் திருப்பி ஓப்படைத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்