கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

காவல்துறையினர் தங்களை கொடுமைப்படுத்துவதாக கடையம் தம்பதியர் வீட்டு கொள்ளை வழக்கில் கைதான பாலமுருகனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
x
நெல்லை மாவட்டம் கடையத்தில் வீட்டில்  இருந்த முதியவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது தந்தை மாடசாமி, தாய் சவுரியம்மாள் உட்பட 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாக கூறிய அவர்கள், விஷம் குடித்து இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் பரிசோதனையில் அவர்கள் யாரும் விஷம் குடிக்கவில்லை என உறுதியானது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்