விசைப் படகு பழுதால், கரை திரும்ப முடியாமல் தவிப்பு : உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

லட்சத் தீவுகள் அருகே விசைப்படகு பழுதானதால், நடுக் கடலில் தத்தளிக்கும் தங்களை காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசைப் படகு பழுதால், கரை திரும்ப முடியாமல் தவிப்பு : உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
x
லட்சத் தீவுகள் அருகே விசைப்படகு பழுதானதால், நடுக் கடலில் தத்தளிக்கும் தங்களை காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொல்லங்கோடு மற்றும் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 10 பேர், அலெக்ஸாண்டர் என்பவரின் விசைப் படகில், கடலுக்குள் சென்றனர். கியார் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, லட்சத் தீவுகளின் கல்பேனி பகுதியில் கரை ஒதுங்கிய அவர்களின் படகு சேதமானது. உள்ளே தண்ணீர் புகுவதால் கரை திரும்ப முடியாமல் தவிக்கும் அவர்கள், படகில் புகும் தண்ணீரை அகற்றியபடி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தங்களை காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்