ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்

ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
x
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், 17 ஆண்டுகளாக இந்த விவகாரம் நிலுவையில் இருந்து வருவதாக குறிப்பிட்டார். குறுக்கிட்ட நீதிபதிகள், பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடப்பதாக ஏற்கனவே, சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டதே ,அதன் நிலை என்ன என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், வெடிகுண்டு தொடர்பான விசாரணை நடைபெறுவதாகவும், அது பற்றிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய, 4 வாரம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்