புருசோத்தமன் இழப்பு : "அதிமுகவிற்கு பேரிழப்பு" - எடப்பாடி பழனிசாமி

புதுவை மாநில அதிமுக செயலாளர் உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
x
புதுவை மாநில அதிமுக செயலாளர் உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், மணவெளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன், குளவி கொட்டியதில் உயிரிழந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நே​ரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், புருசோத்தமனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல... அதிமுக இயக்கத்திற்கு பேரிழப்பு என செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்