"சுஜித்தின் மரணத்தை போல் தமிழகத்தில் இனி ஒரு நிகழ்வு கூடாது" - ஸ்டாலின்

சுஜித்தை போல், இனி ஒரு மரணம் நிகழக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுஜித்தின் மரணத்தை போல் தமிழகத்தில் இனி ஒரு நிகழ்வு கூடாது - ஸ்டாலின்
x
சுஜித்தை போல், இனி ஒரு மரணம் நிகழக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், துயரமான சுஜித்தின் மரணம், தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் எனவும் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எஞ்சி இருக்கும் நாட்களிலாவது அதிமுக அரசு விழித்தெழ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து மூட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். போர்வெல் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பஞ்சாயத்து வாரியாக பராமரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின்,  திமுகவினரும் அந்த விபரங்களை சேகரித்து அதிகாரிகளுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தி இருக்கிறார். மேலும், மாநில, மாவட்ட பேரிடர் ஆணையங்கள் செயல்படுவதற்கு தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தவும், மாவட்ட பேரிடர் ஆணையங்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்