திண்டுக்கலில் மூதாட்டியிடம் சொத்தை எழுதிவாங்கி பேரன் மோசடி

திண்டுக்கலில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தனது பாட்டியை அனாதையாகவிட்டு சென்ற பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
x
திண்டுக்கல் அடுத்துள்ள கல்லாத்தூர் பட்டியை சேர்ந்த கித்திரியம்மாள், கணவர் உயிரிழந்த நிலையில்,  தனது இரண்டாவது மகளின் மகனான ஆரோக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கித்திரியம்மாளை காணாததால் மற்ற மகன்களும் மகள்களும் அவரை தேடிவந்துள்ளனர். அப்போது கித்தரியம்மாள் பிச்சை எடுத்து வந்தது தெரிந்துவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது கணவர் தனது பெயரில்  வாங்கி இருந்த இரண்டரை ஏக்கர் விளை நிலத்தை பேரன் ஆரோக்கியம் எழுதிவாங்கிவிட்டு அனாதையாக விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட கித்திரியம்மாள், திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷாவிடம் சொத்தை மீட்டு தர கோரியும், சம்பந்தப்பட்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்