அரசு நிகழ்ச்சிக்கு, பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுகவினர் : ஆளுங்கட்சியினரின் செயலால் மக்கள் அதிருப்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்காக, அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நிகழ்ச்சிக்கு, பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுகவினர் : ஆளுங்கட்சியினரின் செயலால் மக்கள் அதிருப்தி
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்காக, அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பங்கேற்க உள்ளார். இதற்காக, நகரின் சில இடங்களில் சாலையோரமாக அதிமுக சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் சுபஸ்ரீ மரணம் காரணமாக, பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தவிர்க்குமாறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஆளுங்கட்சி தரப்பிலேயே பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்