தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
x
திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு  தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாணவ மாணவியருக்கு  தலா பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில்  2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் இருபது பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவியருக்கு  தலா பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்