"மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அனைத்திந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பின் முப்பெரும் விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்பி.வேலுமணி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தார். முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின் மூலம்  அதிக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்