பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு -கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை/

தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு -கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை/
x
தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 புள்ளி 5 அடியை எட்டி உள்ள நிலையில்  அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு  26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்