தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் ஒரே நாளில் 72 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
x
சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வறண்டு கிடந்தன. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவ்வப் போது கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, பூண்டி, சோழவரம், புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, ஒரே நாளில் ஆயிரத்து 143 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 18-ம் தேதி பூண்டி ஏரியின் நீர் இருப்பு 15 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது 189 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 65 மில்லியன் கன அடியாகவும், 

மூன்று ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 20 மில்லியன் கன அடியாகவும் இருக்கின்றன. நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஆயிரத்து 345 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் விடிய விடிய பெய்த கன மழையால் 72 மில்லியன் கன அடி உயர்ந்து  ஆயிரத்து 417 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்