இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஓட்டுரிமை என்பது மிகப் பெரிய உரிமை என்றும் தேர்தல் புறக்கணிப்பு என கூறி வாக்காளர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
x
தமிழர் விடுதலைக் கழக அமைப்பின் தலைவர் ராஜ்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்.நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 113 கிராமங்களில், பள்ளர் சமூக மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருவதாக கூறியுள்ளார்.இவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக அறிவிக்ககோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து வரும் தங்கள் வீடுகளில் உள்ள கருப்புக்கொடியை அகற்றகோரி காவல்துறையினர்  அச்சுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள்  சிவஞானம்,  தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனநாயக நாட்டில்  ஓட்டுரிமை  என்பது,  மிகப் பெரிய உரிமை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இடை தேர்தலை புறக்கணிப்பு தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நீதிபதிகள் வாக்காளர்கள் தங்கள் வலிமை வாய்ந்த வாக்குரிமையை இழக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்ற நீதிபதிகள் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தால் அவர்களை போலீசார் அச்சுற்த்தல் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்