டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் மதுபாட்டில்களை வைத்திருந்த தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புதுக்கோட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் மதுபாட்டில்களை வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் மதுபாட்டில்களை வைத்திருந்த  தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
புதுக்கோட்டையில், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில், மதுபாட்டில்களை வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிக்கு, நகராட்சி நிர்வாகம் ,ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், வர்த்தக வணிக நிறுவனங்களுக்கு சென்று, நகராட்சி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்த்தாண்டபுரம் முதல் வீதியில் உள்ள தனியார் தங்கும் விதியில், டெங்கு கொசு பரவும் வகையில், ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த விடுதி உரிமையாளருக்கு, நகராட்சி ஆணையர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.

Next Story

மேலும் செய்திகள்