திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களூருவில் மீட்பு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.
x
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெங்களூரு போலீசார், மீட்டுள்ளனர். கடந்த 2ஆம் தேதி திருச்சியில் பிரபல நகைக்கடையின் சுவற்றில் துளை போட்டு, 13  கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரித்த பெங்களூரு போலீசார், நகைகளை மறைத்து வைத்த இடத்தை கண்டு பிடித்தனர். இதையடுத்து, பெங்களூரு போலீசார் திருவெறும்பூர் கல்லணை அருகே பூசைத்துறை என்ற இடத்தில் நகைகளை தோண்டி எடுத்து பெங்களூரு கொண்டு சென்றனர். இந்நிலையில், முருகன் கொள்ளையடித்த 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பெங்களூரு போலீசார் பெங்களூருவில் காட்சிப்படுத்தினர். இந்த நகைகளை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும், திருச்சி நகைக்கடையினர் உரிய ஆவணத்தை அளித்தால், நகை ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்