உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா சார்பில், தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
x
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா சார்பில், தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த செப்டம்பர்  24ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை போலீசார் கைது செய்திருந்தனர். அதனால், உதித் சூர்யாவின் முன் ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக ஏற்று கொள்ளப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த ஜாமீன் வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதித் சூர்யா தந்தையை விசாரணைக்கு எடுக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் வெங்கடேசன் தான் உண்மை குற்றவாளி என்றும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதி தெரிவித்தார். அப்போது கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேனி நீதிமன்றதில் உதித் சூர்யாவின் தந்தை ஜாமீன் கோரிய வழக்கை திரும்ப பெற்றால், உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்