மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் மினி லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுனர் கைது செய்யப்பட்டார்.
மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் -  ஒட்டுனர் கைது
x
வேலூர் மாவட்டம்  அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும்  பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அரியானாவை சேர்ந்த ஒட்டுனர் ரஜீராமை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்