தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
x
தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பேனருக்கு மாற்றாக, கட்சி கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை தொகுதி மக்கள் வரவேற்று, பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்