"கீழடி பொருட்களை வைத்து மதுரையில் கண்காட்சி" - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை வைத்து, மதுரையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி பொருட்களை வைத்து மதுரையில் கண்காட்சி - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
x
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை வைத்து, மதுரையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,கீழடி அகழ்வாய்வினை காண வரும் 13ஆம் தேதி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தரப்படும் என்றும். கீழடி 4ஆம்  கட்ட அகழ்வாய்வு பணிக்காக 55 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இந்த அகழ்வாய்வு மூலம் சுடுமண்ணாலான உருவங்கள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள் என 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பொருட்களை வைத்து மதுரையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அகழ்வாய்வு குழிகளின் வரைபடம் தயாரித்தல், நிழற்படம் எடுத்தல் போன்ற ஆவணப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்