தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி அமைந்தவுடன் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் - ஸ்டாலின் உறுதி
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக திமுக பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கேட்டுப்போராடிய அந்த சமூக தலைவர்களை, துப்பாக்கி முனையில் ஒடுக்கியது அதிமுக அரசு என்பதை, மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர்  கருணாநிதி தான் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், ஏ.கோவிந்தசாமி படையாச்சிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 சதவீத இட ஒதுக்கீட்டில்  வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, திமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
Next Story

மேலும் செய்திகள்