அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அவரின் தங்கை மகன், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
x
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை வள்ளி. இவரின் மகன் லோகேஷ்குமார் திண்டிவனத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் வீட்டில் தங்கியிருந்தார். பொறியியல் பட்டதாரியான இவர், வழக்கம் போல் சனிக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஞாயிறு காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து, அறையில் பார்த்தனர். அப்போது லோகேஷ்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடல், திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்