வடமாநில இளைஞர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை

குடிகாரனுக்கு சகோதரியை திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்த வடமாநில இளைஞரை, உறவுக்கார மாப்பிள்ளையே கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தார்.
வடமாநில இளைஞர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
x
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார், அவரது உறவினர் சுனில் கோண்ட் உள்ளிட்டோர் சென்னையை அடுத்த மாங்காடு அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று இரவு அனைவரும் மது அருந்திய போது அஜய்குமாருக்கும், சுனில் கோண்ட்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுனில் கோண்ட்,  கத்தரிக்கோலால் அஜய்குமாரின் கழுத்தில் குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதையடுத்து, போரூர் தனியார் மருத்துவமனையில் அஜய்குமாரை அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக, சுனில் கோண்ட்டை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்தபோது,   அஜய்குமாரின் சகோதரியுடன் சுனில் கோண்ட்டுவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது தெரியவந்தது. இந்நிலையில், சுனில் கோண்ட்டுவுக்கு மது பழக்கம் இருப்பதால் தனது அக்காளை திருமணம் செய்து வைக்கக் கூடாது என அஜய்குமார் தகராறு செய்தால், ஆத்திரத்தில் அவரை குத்திக் கொலை செய்ததாகவும் விசாரணையில தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்