கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது
x
கொடைக்கானலில் உள்ள  தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி  அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஓட்டல் வளாகத்தில் உள்ள இந்த கொலுவில் விஷ்ணுவின் 10 அவதாரங்கள், ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி, மீனாட்சி திருகல்யாணம்,  ரங்கநாதர் உருவங்கள் தத்ரூபமாக அமைக்கபட்டுள்ளது. அதேபோன்று புத்தர், ஏசு, காந்தி, அப்துல்கலாம், சங்கீத மும்மூர்த்திகள் உருவங்களும், வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.  இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்