கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்

தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
x
தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் கூடுதல் மகளிர் நீதிமன்ற திறப்பு விழாவில் பேசியஅவர், சிங்கப்பூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு பத்தாயிரம் அளவில் உள்ளதாகவும், தமிழகத்தில் நூறு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளதாகவும் கூறினார். கொசு கடிப்பதற்கு முன்பு அது உள்ளாட்சித் துறை கொசு என்றும், கடித்த பிறகுதான் அது சுகாதாரத்துறை கொசு என்றும் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்