கீழடி அகழாய்வு தளத்தில் புதிய கட்டுப்பாடுகள் - 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதி

கீழடியில் நடக்கும் 5 ஆம் கட்ட அகழாய்வை காண வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
கீழடி அகழாய்வு தளத்தில்  புதிய கட்டுப்பாடுகள் - 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதி
x
2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும் பண்பாட்டோடும் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் அண்மையில் கீழடியில் கிடைத்தன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களும் தொல்லியல் ஆர்வலர்களும் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் பார்வையாளர்களால் பணியாற்றும் நபர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்பி ரோஹித்நாத் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதி கீழடி அகழ்வாராய்ச்சியில் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடலாம் , அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து வரும் தொல்லியல் ஆர்வலர்கள், பார்வையாளர்கள் முழுமையாக தொல்லியல் ஆய்வை பார்வையிட முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்