ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராதபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
x
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ. இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இன்பதுரை தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் ராமசந்திரன் ஆஜராகி  வாதிட்ட நிலையில்,  வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்