கட்டாய பாலியல் தொழிலில் இருந்து இளம்பெண் மீட்பு - 5 பேர் மீட்பு

நெல்லை அருகே ஆடம்பர ஆசை காட்டி இளம்பெண்ணை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கட்டாய பாலியல் தொழிலில் இருந்து  இளம்பெண் மீட்பு - 5 பேர் மீட்பு
x
கருங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் திடீரென நடத்திய சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாலசுப்பிரமணியம், மைதீன், காதர், சித்திக், ராஜாப்பா ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் செய்துங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த பெண்ணை அந்த கும்பல் ஆசை காட்டி ஆட்டோவில் அழைத்து வந்ததாகவும் ஒரு வீட்டில் பூட்டி வைத்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற  கடகஜா உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்