ஊட்டியில் குட்டியை ஈன்ற யானை - முகாமிட்ட 15 யானைகள்

ஊட்டியில் யானை ஈன்ற குட்டியை பாதுகாக்க 15 யானைகள் முகமிட்டிருந்தது . குட்டி யானை நடக்க துவங்கியதும் முகாமிட்டிருந்த யானை கூட்டம் குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது.
ஊட்டியில் குட்டியை ஈன்ற யானை - முகாமிட்ட 15 யானைகள்
x
ஊட்டி முதுமலை சாலையில் கார்குடி வனப்பகுதியில் ஒரு தாய் யானை ஆண் குட்டியை ஈன்றது. இந்த குட்டி யானை சாலை அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் வன விலங்குகள் குட்டியை வேட்டையாடாமல் பாதுகாக்கும் வகையில்15 யானைகள் கூட்டமாய் அங்கே முகாமிட்டு இருந்தன. இந்நிலையில் குட்டி யானை நடக்க துவங்கியதும் முகாமிட்டிருந்த யானை கூட்டம் குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்