ராதாபுரம் தொகுதியில் தபால் மற்று​ம் 3 சுற்றுகளின் வாக்குகள் மறு எண்ணிக்கை - நீதி வென்றுள்ளதாக அப்பாவு வரவேற்பு

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நாளை காலை மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
x
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நாளை காலை மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அப்பாவு, வாக்கு எண்ணிக்கையின் போது, ஏராளமான குளறுபடிகள் நடந்ததாக குற்றம்சாட்டினார். அதில், 703 தபால் வாக்குகள் செல்லாது என அறிவித்தது, வாக்குச் சாவடி முகாவர்களை வெளியேற்றியது, 2 மணி நேரத்துக்கும் மேலாக வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதம் ஆகிய குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியின் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்