நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
x
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களும் படித்து வந்த தனியார் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி அனுப்பிய சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆவணங்கள் தொடர்பாக, 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்