முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம், கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
x
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி யானைமீது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவில் கொடிமரத்தில் சங்கு நாதம் இசைக்க கொடியேற்றப்பட்டது. பின்னர், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் வேடம் அணிவதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோவில் கருவறை முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்