கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை - மருத்துவ கல்வி இயக்குனர்

கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை என்பது மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
x
சென்னை மாணவர் உதித் சூர்யாவை தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் இருவரின் புகைப்படங்களில் வித்தியாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இருவரிடமும் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் விசாரணை நடைபெற்றது. மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு மற்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் ஆகியோர் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, புகைப்படங்களில் சிறிய வித்தியாசம் உள்ளதே தவிர, வேறு எந்த பிரச்னையும் இல்லை  என்று விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்