கொதிக்கும் எண்ணெய்யை முகத்தில் ஊற்றிய மனைவி, உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கணவர் போலீசில் புகார்
திருச்சியை அடுத்த திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த பரோட்டோ மாஸ்டர் சரவணன், அல்லூரை சேர்ந்த காந்திமதி என்பவரை 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருச்சியை அடுத்த திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த பரோட்டோ மாஸ்டர் சரவணன், அல்லூரை சேர்ந்த காந்திமதி என்பவரை 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்தும் வரும் சரவணனை தனிக்குடித்தனம் நடத்த வருமாறு காந்திமதி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு சரவணன் மறுப்பு தெரிவித்து வந்ததையடுத்து கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த குடும்ப சண்டையின் போது காந்திமதி, சரவணன் முகத்தின் மீது மிளகாய் பொடியை தூவி, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக தெரிகிறது. இதனால் படுகாயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ள நிலையில், தனிக்குடித்தனம் வரவில்லையெனில் வரதட்சணை புகார் அளிப்பேன என காந்திமதி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரவணன், மனைவியிடம் இருந்து மீட்டு தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
Next Story

