உயரும் கடல் நீர் மட்டம்: சென்னை, மும்பை, அந்தமான் தீவுகளுக்கு ஆபத்து..?

கடல் நீர் மட்டம் உயர்வால் சென்னை, மும்பைக்கு ஆபத்து ஏற்படலாம் என நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயரும் கடல் நீர் மட்டம்: சென்னை, மும்பை, அந்தமான் தீவுகளுக்கு ஆபத்து..?
x
பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் அரசு சார்பு குழு கடல் மற்றும் பனிப்பாறை தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் 2100 ஆம் ஆண்டு வாக்கில் உலக வெப்பமயம் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலையை விட 2 மடங்கு வெப்பம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 60 முதல் 110 செண்டி மீட்டர் வரை கடல் மட்டம் உயரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக உலகம் முழுவதும் 45 துறைமுக நகரங்கள் பாதிக்கப்பட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் உள்ளிட்ட 4 துறைமுக நகரங்கள் பாதிக்கப்பட  வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுக நகரங்களில் 50 செண்டி மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்