பிரபல தாதா மணிகண்டன் சென்னையில் சுட்டுக்கொலை

சென்னை, கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
x
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல தாதா மணிகண்டன். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. காவல் துறையின் நெருக்கடி காரணமாக ஒரு கட்டத்தில் திருந்தி வாழ முயன்ற மணிகண்டன், பின்னர் தலைமறைவு வாழ்க்கைக்கு திரும்பினார். இருப்பினும் அவர் மீதான புகார் பட்டியல் குறையவில்லை. இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தவரை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபுவை பட்டாக் கத்தியால் தாதா மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த உதவி ஆய்வாளர் பிரகாஷ் தம்மிடம் இருந்த கை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் தாதா மணிகண்டன் மார்பில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். 

படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்